சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் டிராவல்ஸ் அதிபரின் வீட்டில் தாய்,மனைவி, மகள் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், டிராவல்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (52). இலங்கைத் தமிழரான இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார். தனது தாய் தங்கம்மாளையும் உடன் அழைத்து வந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகள் சமீரா (12) நங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சுந்தரேசன் ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். முதலில் நல்ல லாபத்துடன் நடந்து வந்த அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட சுந்தரேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்தக் கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தரேசன் விரக்தியில் இருந்தாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மின்சார ரயில் டிரைவர் தாம்பரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். தற்கொலை செய்து கொண்டவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் மூலம் அவர் யார் என்பதை போலீஸார் விசாரித்தனர். அதில் டிராவல்ஸ் அதிபர் சுந்தரேசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீஸார் சுந்தரேசன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீட்டுக்குள் 3 பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டனர். உடனடியாக இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரங்கிமலை போலீஸ் துணைக் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் போலீஸார் தில்லை கங்காநகர் 42-ஆவது தெருவில் உள்ள சுந்தரேசன் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் தாய், மனைவி, மகளை கொன்று விட்டு சுந்தரேசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார் என்று போலீஸோர் முடிவு செய்தனர்
இதையடுத்து 3 பேரின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையில் சுந்தரேசனுக்கு வேறு யாராவது உதவினார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஆதம்பாக்கம் போலீஸாரும், தாம்பரம் ரயில்வே போலீஸôரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

