சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஐ.பி.எல். தரகர்கள் வீடுகளுக்கு சீல்: சூதாடியவர்களின் பட்டியல் சிக்கியது

சென்னை ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இச் சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின்

Updated On :22 மே 2013, 9:28 am

சென்னை ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இச் சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியல் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஸ் பஜாஜ், ராஜாஅண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற விருதாச்சலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சௌகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் கைது செய்தனர்.

போலீஸ் நடவடிக்கையை அடுத்து சூதாட்ட கும்பலுக்குத் தலைவராக செயல்பட்ட பிரசாந்த் தலைமறைவாகி விட்டார்.

பின்னர் பிரசாந்த், கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். பிரசாந்தை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸôர், அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர், டைரி, பாஸ்போர்ட், செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை கைப்பற்றினர். இதேபோல கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் தரகர் சஞ்சய் பாப்னா வீட்டிலும், வேப்பேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிட்டி என்ற உத்தம் சி.ஜெயந்த் வீட்டிலும் போலீஸôர் சோதனை நடத்தினர்.

வீடுகளுக்கு சீல்: இதில் சஞ்சய் பாப்னா வீட்டில் நடந்த சோதனையில் அண்மையில் நடந்த ஒரு ஐ.பி.எல். போட்டியில் சூதாடியவர்களின் பட்டியல் சிக்கியதாம். இப்பட்டியலில் இரு அணிகள் மீது பணம் கட்டியவர்கள் விவரமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்தப் பட்டியலின் அடிப்படையில் சூதாடியவர்கள் பற்றிய விவரங்களை போலீஸôர் சேகரித்து வருகின்றனர். கிட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 30,880 பணமும், தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 காசோலைகள், ரூ.40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பத்திரம், 12 சிம்கார்டுகள், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 பிரசாந்த் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சூதாட்ட தரகர்கர் பற்றிய தகவல்களும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரசாந்துக்கும் தில்லி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் உள்ள சூதாட்ட தரகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் அந்த ஆவணங்கள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சோதனைக்கு பின்னர் சஞ்சய், கிட்டி வீடுகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் சீல் வைத்தனர். பிரசாந்த் வீட்டில் ஒரு அறைக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. சென்னையில் பிரசாந்தும், கிட்டியும் சூதாட்டத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு பெரிய தரகர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் போலீஸôருக்கு தெரியவந்துள்ளது.

பிரசாந்த் போலீஸôருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் 17 ஆண்டுகளுக்கு மேலாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும், சென்னையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும் கூறி இருப்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து போலீஸôர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

தரகர்களிடம் 3 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு தரகர்களையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். இவர்களில் ஹரிஸ் பஜாஜ், பிரவீண் குமார் என்ற பப்பு, லக்கி என்ற நர்பத், வேதாச்சலம் ஆகிய 4 பேரையும் 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சைதாப்பேட்டை 11-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

சூதாட்டக் கும்பலில் பிரசாந்துக்கு அடுத்தப்படியாக முக்கிய தரகர்களாக இருந்த இவர்கள் 4 பேரிடம் விசாரணை செய்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் இவர்களிடம் விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறப்பட்டது. இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், அவர்கள் 4 பேரிடமும் 3 நாள்கள் விசாரணை நடத்த போலீஸôருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.