உள்துறையின் புதிய செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்) ராஜீவ் ரஞ்சன் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் (வருவாய்த் துறை செயலாளர்)
ககன்தீப் சிங் பேடி - வருவாய்த் துறை செயலாளர் (கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்)
எஸ். விஜயகுமார் - கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்)
கிரிஜா வைத்தியநாதன் - நில நிர்வாக ஆணையாளர் (தமிழ்நாடு மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்).
உள்துறையின் 4-வது புதிய செயலாளர்: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், உள்துறையின் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டார். அவர் 2011 ஜூன் மாதம் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக ரமேஷ்ராம் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.
ரமேஷ் ராம் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஜனவரி 27-ல் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக உள்துறையின் புதிய செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இப்போது, ராஜகோபால் மாற்றப்பட்டு நிரஞ்சன் மார்டி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

