விபத்துகள் மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 8 போலீஸாரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர். மதியழகன், சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலைய தலைமைக் காவலர் எம். வைத்திலிங்கம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப் படை உதவி ஆய்வாளர் கே. சந்திரன், திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமல் பிரிவின் தலைமைக் காவலர் பி. காளிதாஸ் ஆகியோர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனர்.
இதுபோல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி. செல்வராஜ், தளி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எம். சண்முகசுந்தரம், கொமரலிங்கம் காவல் நிலையக் காவலர் பி. தன்னாசி, காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் என். மாசிலாமணி ஆகியோர் சாலை விபத்துகளிலும் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

