பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் பின்னர், நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால், சிறையில் இருந்து ராமதாஸ் சனிக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ராமதாஸ், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

