திருப்பத்தூரில் திரையரங்கத்தின் மேற்கூரை பக்கவாட்டு சுவருடன் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில், 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள புதுப்பேட்டையில் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. 1992-ல் கட்டப்பட்ட இத்திரையரங்கில் பகல் காட்சியை 65 பேர் பார்த்தனர்.
மாலையில் திருப்பத்தூர் நகரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில், மாலை 5 மணியளவில் திரைப்படம் முடிந்து, பார்வையாளர்கள் வெளியேறும்போது, திரையரங்கின் மேற்கூரையுடன் பக்கவாட்டு சுவர் திடீரென விழுந்துள்ளது.
இதில், புதுப்பேட்டையில் உள்ள பாபு நகரைச் சேர்ந்த ராஜசேகர் (45), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பகுதி 1-ஐ சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் கோபிநாத் (45), கூத்தாண்டகுப்பத்தைச் சேர்ந்தவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருமான சிவா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் தமிழரசன் (39), சிவக்குமார் (33), ஸ்ரீதர் (34), இளம்பாரதி (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலின்பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
ஆட்சியர் பொ.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ.ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணை நடத்தி நடவடிக்கை: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறியதாவது: திரையரங்கில் முகப்பு பகுதியில் உள்ள கான்கிரீட் மழையில் நனைந்து, பெயர்ந்து விழுந்ததில் விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

