காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த இடைக்கால ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறியுள்ளார்.
ஈரோட்டில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி நதி நீரைப் பெறுவதில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அதுபற்றி திமுக தலைவர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை.
ஆனால், 3-ஆவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபின், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பலமுறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஆணையம் அமைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இது முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
கச்சத்தீவை மீட்கப் போவதாக கருணாநிதி கபட நாடகம் ஆடுகிறார். ஆனால், இப்போது கச்சத்தீவு பற்றி விளம்பரத்துக்காக கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
ஆட்சியில் இல்லாதபோது மக்களை பற்றி பேசுவதும், ஆட்சியில் இருக்கும்போது தனது மக்களை (வாரிசுகளை) பற்றி பேசுவதும்தான் கருணாநிதிக்கு வாடிக்கை. இனிமேல் அவரை தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

