சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போராட்டம் தொடரும்: அன்புமணி

மரக்காணம் கலவரம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடும்வரை அறவழியில் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.

Updated On :2 மே 2013, 10:12 am

மரக்காணம் கலவரம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடும்வரை அறவழியில் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.

சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மரக்காணம் கலவரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினர்.

பாமகவினர் 2 பேர் கொல்லப்படவில்லை என முதலில் கூறிய போலீஸ், தற்போது செல்வராஜ் என்பவரின் இறப்பை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக அறவழியில் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறிப் போராட்டம் நடத்தியதற்காக தமிழகத்தில் எந்தத் தலைவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.

முதிர்ந்த தலைவரான ராமதாûஸ காலை 10 மணியளவில் கைது செய்து எந்த வசதியும் இல்லாத ஒரு மண்டபத்தில் இரவு 10 மணி வைத்திருந்தனர். பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பெருவிழாவுக்கு பெருமளவில் கூட்டம் வந்தது. அடுத்து பாமக ஆட்சி வந்துவிடுமோ என்ற அச்சத்தால்தான் பாமக மீதான நடவடிக்கைக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் மெüனம் சாதிக்கின்றன.

தருமபுரியில் வீடுகளை தலித்துகளே கொளுத்திக் கொண்டனர். அதற்கு ரூ.8 கோடி வரை நிவாரணம் கிடைத்தது. அதைப்போல இப்போதும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளைக் கொளுத்திக் கொண்டனர்.

போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக யாரும் பேசுவதில்லை.

கறுப்புக் கொடி: மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். பாமகவினர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதுவரை அறவழியில் போராட்டம் தொடரும். பாமகவினர் வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

கோயில் மேல் ஏறியது தவறுதான்: மாமல்லபுரம் கோயிலில் பாமகவினர் ஏறி கொடியை வைத்தது தவறுதான். ஆனால் கோயிலுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. மாமல்லபுரம் கூட்டத்தில் மூத்த தலைவர்களை குரு கடினமாகப் பேசியதும் தவறுதான்.

மாமல்லபுரம் கூட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி ராமதாஸ் பேசியதில் பெரிய தவறு ஒன்றுமில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் இரவில்தான் நடைபெறுகிறது. இப்போது தேர்தல் காலமும் இல்லை. எனவே ராமதாஸ் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி பேசியது தவறு இல்லை.

நான் (அன்புமணி) தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்தாக ஜாதிய தூண்டுதலுடன் பாமக செயல்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருமாவளவன் விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செயல்படுகிறார் என்று எங்களாலும் சொல்ல முடியும் என்றார் அன்புமணி.