சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On :2 மே 2013, 10:14 am

ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் கோரமங்களா ஏஜே காலனியைச் சேர்ந்த 14 இளைஞர்கள் ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்தனர்.

ஒகேனக்கல் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் தண்ணீர் அதிகம் வரும் பகுதியைத் தேடிச் சென்றனர்.

ஒகேனக்கல் அருவியிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கூடுதுறை மணல்திட்டு பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஜெகதீஷ் என்ற இளைஞர் நீச்சல் தெரியாமல் ஆழமானப் பகுதிக்குச் சென்று சிக்கிக் கொண்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனிருந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

இதில், நாகேஷ் (25), விஜி (26), ராஜீவ் (25), நந்தா (22) ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று ஜெகதீஷை காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.

ஆனால், மற்ற இளைஞர்கள் ஜெகதீஷை காப்பாற்றி கரைக்கு தூக்கி வந்தனர். தகவலறிந்து, தீயணைப்பு வீரர்களும், ஒகேனக்கல் போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர்.

இதுதொடர்பாக, ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.