பா.ம.க தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் காஞ்சிபுரத்தில் ஆந்திர அரசு பஸ் உள்பட 2 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 10 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சேம்பாக்கம் பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து 37 பயணிகளுடன் காஞ்சிபுரம் வழியாக வேலூருக்குப் புறப்பட்டது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே இரவு 11 மணிக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது தாமலைச் சேர்ந்த ஒரு கும்பல் பஸ்ûஸ மறித்தனர்.
பஸ் நின்றதும் பயணிகளை இறக்கிவிட்ட அவர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீ வைத்து பஸ்ஸில் தூக்கி எரிந்தனர். இதில் பஸ் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சேவியர் தன்ராஜ், டி,எஸ்.பி. சந்திரசேகரன் உள்ளிட்ட போலீஸôர் வந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சித் தலைவர் மணிமாறன் (50), பாலு (24), குமார் (40), துரைசாமி (55), ஏகாம்பரம் (53), முரளி (51),மாரி (29), இளங்கோவன் (30), குமரன் (25), பழனி (30), ஆனந்தன் (30) ஆகியோரை பாலுச்செட்டி போலீஸôர் கைது செய்தனர்.
ஆந்திர அரசு பஸ் எரிப்பு: காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு புதன்கிழமை காலை 11.45 மணிக்கு 50 பயணிகளுடன் ஆந்திர மாநில புத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ûஸ சித்தூரைச் சேர்ந்த கிரி (45) ஓட்டினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த அரக்கோணம் சாலையில் கோவிந்தவாடி அகரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, 10-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் பஸ் மீது கற்களை வீசி டிரைவரை நிலை குலையச் செய்தனர். மேலும், பயணிகளையும், டிரைவர், நடத்துனரையும் வெளியே வரவிடாமல் அக்கும்பல் தடுத்தது.
மேலும் தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டில்களை பஸ்ஸில் தூக்கி எரிந்து தீ வைத்துக் கொளுத்தினர். பயணிகள் மற்றும் பஸ் ஊழியர்கள் பின்பக்க கண்ணாடியை உடைத்து தப்பி உயிர் பிழைத்தனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புப் படை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது.
எஸ்.பி. சேவியர் தன்ராஜ், டி,எஸ்.பி. சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சக்திமணி, வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசராணை நடத்தினர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
"தப்பியது பெருமாள் செயல்'
திருப்பதிக்கு புறப்பட்ட ஆந்திர அரசு பஸ்ஸில் பயணித்த காஞ்சிபுரத்தை அடுத்த ஒழையூர் - மோட்டூர் ஊராட்சி முன்னாள் தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்( 40) என்ற பெண் கூறியது:
திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தோம். கோவிந்தவாடி அகரம் அருகே சென்று கொண்டிருந்த போது, 10-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் பஸ்ûஸ கல்லால் தாக்கி சேதப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பயணிகளையும், பஸ் ஊழியர்களையும் கீழே இறங்கவிடாமல் அடாவடிச் செயலில் ஈடுபட்டனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பஸ்ஸினுள் எரிந்து தீ வைத்தனர்.
ஒரு வழியாக உடன் வந்த ஆண்கள், பின்புற கண்ணாடியை உடைத்து குழந்தைகள் மற்றும் பெண்களை முதலில் காப்பாற்றினர்.
உயிர் தப்பினால் போதும் என்று உடைமைகளை அங்கேயே விட்டுவிட்டோம். வெறிக் கும்பலிடம் இருந்து குழந்தைகளுடன் நாங்கள் தப்பியது பெருமாள் செயல் என்று மிரட்சியுடன் தெரிவித்தனர்.
பஸ்ûஸ ஓட்ட விடாமல் நிலைகுலையச் செய்தனர்: பஸ் டிரைவர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கிரி(45), புத்தூரைச் சேர்ந்த நடத்துனர் ஆனந்தன் (47) ஆகியோர் கூறியது:
திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்த 10-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் சரமாரியாக கற்களை வீசி எறிந்தனர். இதனால் பஸ்ûஸ நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பெட்ரோல் பாட்டில்களை எறிந்து, தீ வைத்து கொளுத்தினர். எனினும் நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் எனத் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

