கின்னஸ் சாதனை முயற்சியாக ப.சங்கரன் (47) என்வர் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் புதன்கிழமை 3 மணிநேரம் தலைகீழாக சிரசாசனத்தில் நின்று சாதனை படைத்தார்.
மே தினத்தையொட்டி மகாவீர் கலை இலக்கிய பேரவை, மற்றும் ஸ்ரீரமணாலயா ஆன்மிக இளைஞர் கழகம் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் டைகர் கே. சம்சுதீன் தலைமை வகித்தார். ஜானகியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ், மைக்ரோ பாயின்ட் ஐ.டி.ஐ. நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், விருதுநகர் சுவாமி விவேகானந்தா யோகா மைய மாவட்டத் தலைவர் அய்யம் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக துணைத் தலைவர் ஆர். அழகுமுருகன் வரவேற்றார். ப.சங்கரன் சஞ்சீவி மலையில் தலைகீழாக மூன்று மணிநேரம் சிரசாசனத்தில் நின்று சாதனை நிகழ்த்தி காட்டினார். இவருக்கு ராஜபாளையம் டி.எஸ்.பி. அசோகன் பரிசு வழங்கி கெüரவித்தார்.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்றத் தலைவர் ராமராஜ், ஜே.சி.ஐ. மண்டலத் தலைவர் மாடசாமி, சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உட்பட பலர் சங்கரனை பாராட்டி கெüரவித்தனர். ஆர்.அழகுமுருகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மகாவீர் கலை இலக்கிய பேரவை மற்றும் ஸ்ரீரமணாலயா ஆன்மிக இளைஞர் கழகம் செய்திருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

