கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் மதன்(20). அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சரத்(20). லாரி டிரைவர்களான இருவரும் நண்பர்கள்.
÷இந்நிலையில் மதன், சரத் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மதன் பைக்கை ஓட்டினார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கரி ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி பைக்கின் பின்னால் மோதியது.
இதில் படுகாயமடைந்த மதன், சரத் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் திப்பாபள்ளி பகுதியை சேர்ந்த தர்மையா மகன் கனகராஜை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

