மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்தப் பேட்டி:
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் போன்றவற்றில் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டிய தமிழக அரசு மது விற்பனையில் இலக்கு நிர்ணயித்து செயல்படும் போக்கு கண்டனத்துக்குரியது.
டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தி வருகிறது. இதில், இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதை முதல் கட்டமாக கலால் துறை அமைச்சரிடம் அளிக்கப்படவுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் ஏப்ரல் 29 ஆம் தேதி கலால் துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளதால், அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து காங்கிரஸ் மற்றும் அவர்களுடன் இணையும் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வதை முறியடிக்கும் விதமாக மக்களிடையே தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் தமிழருவி மணியன்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

