பொன்னேரி-மீஞ்சூர் இடையே போதிய பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதம் நேரும் முன்னர், போதிய பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
÷திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பொன்னேரியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பாக மீஞ்சூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு பணி நிமித்தமாக பொன்னேரி வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படாததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
÷குறிப்பாக மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, மணலி, கொண்டக்கரை, இடையஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல சரக்கு வாகனத்தையே நம்பியுள்ளனர்.
அவர்கள், சரக்கு வாகனங்களில் இருமடங்கு கட்டணம் அளித்து பயணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வருமானத்தை குறிவைத்து, பயணிகளை பொதிமூட்டைகள் போன்று அள்ளித் திணித்து வேகமாக விரையும் இதுபோன்ற வாகனங்களால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.
÷எனவே, மீஞ்சூர் பகுதிக்கு பொன்னேரியில் இருந்து 30 நிமிடத்துக்கு ஒருமுறை பஸ்ûஸ இயக்க விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே கிராம மக்கள், ஏழைத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

