சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ இன்று ஆஜர்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறும் விசாரணையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 8:31 am

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறும் விசாரணையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

நச்சுவாயு வெளியானதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த வழக்கின் விசாரணையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்க இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.