சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு: வைகோ கண்டனம்

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு போட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 9:05 am

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு போட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.ராமசாமி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் மீ.தா.பாண்டியன் ஆகியோர் மீது தேச ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பேச்சுரிமையை நசுக்குவதாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்திய அரசு துரோகம் செய்யுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கும் என்று பிரதமரிடம் நேரிலும், எழுத்து மூலமாகவும் நான் கூட (வைகோ) தெரிவித்துள்ளேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து இந்தத் துரோகத்தை செய்து வருவதால், தமிழகத்தின் இளம் தலைமுறையினர் நெஞ்சங்களில் இந்திய ஒருமைப்பாடு கேள்விக் குறியாகி விட்டது.

எனவே, இருவர் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை தமிழக காவல்துறை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.