ஆஸ்திரேலியா செல்லும்போது படகு பழுதானதால் துபையில் சிக்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லும்போது நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்துக் கொண்டிருந்த 46 ஈழத் தமிழர்களில் 7 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 20 பேருக்கு அமெரிக்காவும், ஸ்வீடனும் புகலிடம் வழங்கியுள்ளன. மீதமுள்ள 19 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபை அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 19 பேரில் ஈழத்தில் இருந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோகினி ரதிமோகனும் ஒருவர். ஏற்கெனவே, அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், லோகினியை இலங்கைக்கு அனுப்புவது சரியானது அல்ல.
எனவே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

