தமிழக அரசியல் கட்சிகளை இலங்கைத் தமிழர்கள் நம்பவில்லை, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால் மட்டுமே தங்களுக்கு நன்மை செய்ய முடியும் என அவர்கள் நம்புவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி. நாராயணசாமி, காரைக்காலில் புதன்கிழமை தெரிவித்தார்.
தனது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சத்தில் காரைக்கால் புளியங்கொட்டை சாலை மேம்படுத்துதல் பணித் தொடக்க விழாவில் புதன்கிழமை பங்கேற்று நாராயணசாமி பேசியது:
மத்தியிலும், புதுவை மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குள்ளது. காரைக்காலில் துறைமுகம், விளையாட்டு அரங்கம், ரயில் போக்குவரத்து, என்.ஐ.டி, கேந்திரிய வித்யாலயா, கோவில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி, புதிதாக ஆறு பாலங்கள் கட்டுவது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் தற்போதைய முதல்வர் ரங்கசாமி ஆட்சியில், மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செலுத்தப்படவில்லை, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, மீனவர்களுக்கு டீசல் மானியம் தரவில்லை, காவிரி தண்ணீர் பெற முயற்சிக்கவில்லை, பட்ஜெட்டில் கூறிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம், பால், பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டன.
இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள் சில, இலங்கை தமிழர்களுக்காக போராடுகின்றன. மாணவர்களை தூண்டிவிடுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது, தங்களுக்கு தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை, காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளே நன்மை செய்ய முடியும் என்று நம்புவதாக அங்குள்ள தமிழர்கள் கூறியுள்ளனர் என்றார் நாராயணசாமி.
இந்நிகழ்ச்சியில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன், பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர். கமலக்கண்ணன், அ. மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

