நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடும் முயற்சியில், பூட்டை உடைக்க முடியாமல் போனதால், ரூ.7.50 கோடி நகை, பணம் தப்பின.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கமும், அதன் வளாகத்திலேயே நியாய விலைக் கடையும் அமைந்துள்ளன. இந்தக் கடன் சங்கத்தின் பின்புறம் பெரியய்யம்பாளையத்தில் நிலத் தரகர் கந்தசாமி (60), மனைவி கண்ணம்மாள் (50), மகள் நீலாம்பிகை (20) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வெளியில் சென்றிருந்த அவர்கள் வியாழக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததாம். பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் அருகேயுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கும், அதன் வளாகத்திலுள்ள நியாய விலைக் கடைக்கும் சென்று திரும்பியது. இதையடுத்து, போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மர்ம நபர்கள் நியாய விலைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.500 திருடியது தெரிய வந்தது. பிறகு, அருகிலிருந்த கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளதும் தெரிய வந்தது. ஆனாலும், பூட்டை உடைக்க முடியாததால் மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதனால், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ரூ.7.5 கோடி மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது. போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

