""இவன் பேரு டஃபி, டீமோ கூட விளையாடிட்டு இருக்கும் போது, நகம் இடக்கண்ணில் பட்டுருச்சு. காயத்துக்கு மருந்து போட்டோம். மறுபடியும் சொன்ன பேச்சைக் கேட்காமல் விளையாடப் போய் அடிபட்டு விட்டது டாக்டர். கண்ணுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே, மறுபடியும் ஆபரேஷன் செய்யணுமா?'' கவலையாக கேட்டுக் கொண்டிருந்தார் திருவண்ணாமலையைச் சேர்ந்த குமார்.
திருவல்லிக்கேணி தில்லானுக்கு கண்கள் சிவந்து ("செர்ரி ஐ') காணப்பட்டன. ஜாய்ண்ட் அப்பீலுக்கு வலக் கண்ணில் பிரச்னை. இவர்களை அழைத்து வந்தவர்கள் அனைவருமே டாக்டர் என்ன சொல்லப் போகிறார் எனக் கவலையுடன் காத்திருந்தனர். ஒண்ணும் பிரச்னையில்லை; மருந்து போட்டா சரியாயிடும் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற பரிந்துரைகளை அளித்த டாக்டர், டஃபியை மட்டும் திங்கள்கிழமை மறுபடியும் கூட்டிட்டு வாங்க என்றார்.
இந்த உரையாடல்களில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என நினைக்கிறீர்களா. டஃபி லேப்ராடர் இன நாய், தில்லான் மாஸ்டிப் இனத்தைச் சேர்ந்தது.
ஜாய்ண்ட் அப்பீல் சென்னை மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த குதிரை. வேப்பேரியில் உள்ள சென்னை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில், வியாழக்கிழமை நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச கண்சிகிச்சை முகாமில் தான் இந்த உரையாடல்களை கேட்க முடிந்தது.
வலது கண், மிகவும் பாதிப்படைந்த நிலையில் வந்த பட்ஜெரிகர் பறவையை அழைத்து வந்திருந்த சூளை பகுதியைச் சேர்ந்த ரிஸ்வின்; 15 பூனைக் குட்டிகள் 2 நாய்கள் என வீட்டையே செல்லப் பிராணிகளுக்காக அர்ப்பணித்துள்ள அயனாவரத்தைச் சேர்ந்த சுமதி என பலரும் தங்களின் செல்லப் பிராணிகளை அழைத்து வந்திருந்தனர்.
இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பிரபாகரன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்சிகிச்சைக்காக தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.
அப்போது முதல்வர் ஜெயலலிதா இதைப் பாராட்டி ஊக்கமளித்தார். ஆண்டுக்கு 5,000 பிராணிகள் கண் சார்ந்த சிகிச்சைக்காக இங்கு அழைத்து வரப்படுகின்றன. விலங்கு நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதற்கு காரணம்.
முதல் முறையாக இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. செல்லப் பிராணிகளை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்லும் போது அங்கு குச்சிகள், முட்கள் போன்றவை கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை போன்றவற்றின் இனப்பெருக்கத்தை
அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர். மதியம் 1 மணி வரை நடைபெற்ற முகாமில் 78 நாய்கள், 11 பூனைகள், 3 குதிரைகள் மற்றும் பறவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பெரும்பாலான பிராணிகளுக்கு கண்புரை, ரத்த சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் போன்ற பிரச்னைகள் அதிகம் இருந்தன.
முன்னதாக முகாமின் ஒரு பகுதியாக அமெரிக்கா, மிச்சிகன் பல்கலைக்கழக கால்நடைத்துறை பேராசிரியர்கள் சைமன் பீட்டர்சன், பிரைடன் ஜே ஸ்டேன்லி ஆகியோர் செல்லப் பிராணிகளின் கண் மற்றும் தோல் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது என அரசுப் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

