கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்துக்கு வனத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஜி. பீம்ராவ் (மதுரவாயல்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), டி. ராமச்சந்திரன் (தளி) ஆகியோர், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வரும் ஈஷா யோக மையம் உள்ளிட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்குப் பதிலளித்து அமைச்சர் கே.டி. பச்சைமால் பேசியது: கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையம் வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைத்துள்ளது. வனத் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். புதிய கட்டடங்கள் கட்ட இந்தக் குழுமத்திடம் ஈஷா மையம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அனுமதி கிடைக்கும் முன்பே கட்டடங்கள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து ஈஷா யோக மையத்துக்கு வனத் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

