இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற யுத்தத்துக்கு, இந்தியா துணை நின்றதாகக் கூறப்படும் பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தேனியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை போல நாகர்கோவில் நகராட்சியையும் மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்த வேண்டும்.
மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது. கூட்டணி மற்றும் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக கடிதம் கொடுத்த அடுத்த நாளே, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை மற்றும் விசாரணை நடத்தியது. ஆட்சியாளர்களின் சுயலாபத்துக்கு சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
கேரளத்தில் தென்னை விவசாய மேம்பாட்டுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் தமிழகத்தில், தற்போது வறட்சி மற்றும் நோய்த் தாக்குதலால் தென்னை விவசாயம் நலிவடைந்துள்ளது. தென்னை விவசாய மேம்பாட்டுக்கு கேரளத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை விட இரண்டு மடங்கு நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிமுக கட்சித் தேர்தல் போல நடைபெறுகிறது. சின்னமனூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யச் சென்ற நகர பாஜக தலைவர் பரமசிவம், சின்னமனூர் அதிமுக நகர்மன்றத் தலைவர் சுரேஷ் என்பவரால் மிரட்டப்பட்டுள்ளார். தொழில் ரீதியில் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியா துணை நின்றதாகவும், இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தத்தை நடத்துமாறு அரசு கேட்டுக் கொண்டதாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ள பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும்.
இலங்கை அரசைக் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையான, துணிச்சலான அரசு அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்னை முடிவுக்கு வரும். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவர்.
இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமின்றி, உலகளவில் தமிழர்களின் நலன் காக்கும் அரசாக பாஜக அரசு அமையும். வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் லோகன்துரை, மாவட்டத் தலைவர் ராஜபாண்டி, தேனி நகரத் தலைவர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

