சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சித்தேரி ரயில் விபத்து: இருப்புப் பாதை சீரானது; ரயில்கள் இயங்கத் தொடங்கின

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் ரயில் விபத்து நடைபெற்ற இருப்புப் பாதையின் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை காலை நிறைவடைந்தது. இதையடுத்து, அப்பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கின.

Updated On :12 ஏப்ரல் 2013, 6:35 am

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் ரயில் விபத்து நடைபெற்ற இருப்புப் பாதையின் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை காலை நிறைவடைந்தது. இதையடுத்து, அப்பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கின.

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் இருந்து கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூர் நோக்கிச் சென்ற சூப்பர் பாஸ்ட் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை புதன்கிழமை அதிகாலை கடந்து, காட்பாடியை நோக்கி புறப்பட்டது. அப்போது 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள சித்தேரியில் விபத்துக்குள்ளானது.

இதில், 11 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பாதை சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீர்கெட்டுப் போனது. அப்பகுதியில் இருந்த உயர்மின் அழுத்த மின்மாற்றி மற்றும் மின்பாதை முற்றிலும் சேதமடைந்தன. இவ்விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். 2 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர்.

பயணிகள் மீட்கப்பட்டதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். புதன்கிழமை காலை 10.30 மணியளவில் காட்பாடி-சென்னை மார்க்கம் செல்லும் இருப்புப் பாதை சீரமைக்கப்பட்டது.

விபத்து நடந்த சென்னை-காட்பாடி மார்க்கம் செல்லும் பாதையை சீரமைக்கும் பணி புதன்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்தது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இப்பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.

அதைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு முதுநிலை பொறியாளர் அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, இப்பாதையில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இருப்பினும், மின்பாதை சீரமைப்பு பணிகள் முழுமை பெறாத நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் டீசல் என்ஜினுடன் புறப்பட்டது. சீரமைக்கப்பட்ட பாதையை இந்த ரயில் பிற்பகல் 12.15 மணியளவில் 10 கி.மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.

பிற்பகலில் உயர்மின் அழுத்த மின்மாற்றி அமைத்தல், மின்பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதன்பின்னர் மாலை 4.35 மணியளவில் சென்னை-ஹுப்ளி எக்ஸ்பிரஸ் ரயிலும், 4.45 மணிக்கு தர்பங்கா-பெங்களூர் எக்ஸ்பிரஸம், 4.55 மணிக்கு சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸூம், சீரமைக்கப்பட்ட பாதையைக் கடந்து சென்றன.

வியாழக்கிழமை ரத்தான ரயில்கள் தவிர சென்னையில் இருந்து புறப்படும் பிற ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இப்பாதையில் செல்கின்றன என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.