உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அடுத்த ஆண்டு (2014) மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து புதிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா பிறப்பித்துள்ளார்.
எவ்வளவு நிதி ஒதுக்கீடு: துவரம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ. 314 கோடியும், உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ.251.81 கோடியும், பாமாயில் கொள்முதலுக்காக ரூ.449.20 கோடியையும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவிடுகிறது. நடப்பு நிதியாண்டில் உணவுத் துறைக்காக ரூ.4,900 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

