தமிழக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு பகுதிகளிலோ அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ மீண்டும் திறக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளினால் தான் விபத்துகள் நேர்கின்றன என்று காரணம் காட்டி, அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மற்ற மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.
மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூறியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை மதித்து மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை அந்தந்த பகுதிகளில் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இதுவும் தார்மீக அடிப்படையில் தவறாகும். சாலைகளில் மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவற்றை வேறு இடங்களில் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

