மதுராந்தகம் அருகே 750 ஏக்கர் நிலத்தில் விளைவிக்க வைக்கப்பட்டிருந்த நெல் பயிர் தண்ணீரின்றி காய்ந்து விட்டதாகவும், உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் அப்பகுதி விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வறட்சியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர்கள் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அண்மையில் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்து. இந்த நிலையில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழாமூர் ஊராட்சி மன்றத் தலைவர் லதா விஜயகுமார், கிராம ஏரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் வி. துலுக்காணம் மற்றும் கிராமப் பொது மக்கள் சார்பில் தனித்தனியாக வழங்கப்பட்ட மனு விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கீழாமூர் ஊராட்சி. இங்கு சுமார் 287 குடும்பங்களைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் முழுக்க, முழுக்க ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கூலி வேலையையும் செய்துவருகின்றனர்.
அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு மழையின்போது இப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்குள்பட்ட பெரிய ஏரி உடைந்து மழைநீர் வீணாகியது. இந்த ஏரியின் மூலம்தான் இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கிணற்று நீர் பாசனவசதியும் இல்லை. இதனால் இக்கிராமத்தில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டிருந்த நெல் பயிர் போதிய தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களைப் பார்வையிட்டு விவசாயிகளுகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். பெரிய ஏரி மதகை சீரமைத்து கிராம விவசாயிகளையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு: ஆட்சியர் லி. சித்ரசேனனிடம் கேட்டபோது அவர் கூறியது: மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விவசாயிகள் எடுத்து வைக்கவில்லை. மேலும் அந்தந்த பகுதிகளுக்கே சென்று குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது, அப்போதும் விவசாயிகள் இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் விவசாயிகள் வெளியே வருகின்றனர்.
வேளாண்துறை அதிகாரிகளை கீழாமூர் கிராமத்தில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளேன். அந்த ஆய்வின்போது உண்மை தன்மையை அறியும் வகையில் தண்ணீர் இன்றி காய்ந்ததாகக் கூறப்படும் பயிர்களை விடியோவில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் தரும் அறிக்கைக்கு பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

