தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்யும் டீசலுக்கு கூடுதல் விலை வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பினை தள்ளி வைத்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே துறை உள்பட டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு மட்டும் விலையை உயர்த்தி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
ஆனால், சில்லறை நுகர்வோருக்கு ஒரு விலை, மொத்தமாக கொள்முதல் செய்வோருக்கு மற்றொரு விலை என மத்திய அரசு இரட்டை விலைக் கொள்கையைப் பின்பற்றுவது சரியல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மத்திய அரசின் இந்த விலை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோர் சில நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி, மொத்தமாக டீசலை கொள்முதல் செய்வதற்காக கூடுதல் விலை விதித்தால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால் ஏழை, நடுத்தர பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடுமையான நஷ்டத்தை குறைக்கும் வகையில் பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியத்தைப் படிப்படியாகக் குறைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாகவே டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கான மானியம் குறைக்கப்பட்டு, விலை உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த கொள்கை முடிவுக்கு வழக்கின் ஆரம்ப நிலையிலேயே இடைக்காலத் தடை விதித்தது சரியல்ல. ஆகவே, தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் திங்கள்கிழமை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பினை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

