திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் பொதுத்தேர்வின்போது, துண்டுச் சீட்டு வைத்து காப்பியடித்ததாக 37 பேர் பிடிபட்டனர்.
திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) உஷாராணி தலைமையிலான பறக்கும் படையினர் ஒருசில தேர்வு மையங்களில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். செங்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில், முக்கிய வினாக்களுக்கான விடைகளை துண்டுச் சீட்டுகளாக எழுதிக்கொண்டுவந்து, மறைத்து வைத்து காப்பியடித்ததாக 37 மாணவ, மாணவியர் பிடிபட்டனர்.
அம்மாணவ, மாணவியர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் தனித் தேர்வர்கள் 30 பேர்; மீதமுள்ள 7 பேர் செங்கம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காப்பியடித்து பிடிபட்ட மாணவ, மாணவியரின் விடைத் தாள்கள், காப்பியடிக்க பயன்படுத்திய துண்டுச் சீட்டுகள், ஜெராக்ஸ் பிரதிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

