சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம் ஆகியவற்றை திருடிச்

Updated On :2 ஏப்ரல் 2013, 8:57 am

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த பென்னாலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சி (48). கூனிப்பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர்.

இவரது மனைவி சுமதி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகன் ராஜேஷ், பிளஸ் 2 தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம் போல் வீட்டைப் பூட்டிவிட்டு கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்றனர். ராஜேஷும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ராஜேஷ் பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தனது தந்தை தனஞ்சிக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த தனஞ்சி, வீட்டுக்குள் சென்றுப் பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துச் சென்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பென்னாலூர்பேட்டை போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.