அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் விபத்து கால அதிவிரைவு அவசர உதவி ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரிய உறுப்பினர் (மெக்கானிக்கல்) கேஷவ் சந்திரா தெரிவித்தார்.
சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) 1600 குதிரை சக்தி திறன் கொண்ட டீசல் மின்சார தொடர் ரயிலையும், விபத்து கால அவசர உதவி ரயிலையும் தொடங்கி வைத்து திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
இந்திய ரயில்வே துறையில் மொத்தமாக 59 கோட்டங்கள் உள்ளன. இப்போது, சுமார் 26 கோட்டங்களில் விபத்து காலத்தில் செல்லும் அவசர உதவி ரயில்கள் உள்ளன. 2017-ம் ஆண்டுக்குள் அனைத்துக் கோட்டங்களிலும் அதிநவீன அதிவிரைவு அவசர கால உதவி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர கால உதவி ரயில் மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். இந்த ரயிலில் 2 முனைகளிலும் 2 இன்ஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். மூன்று பெட்டிகள் அடங்கிய இந்த ரயிலில் கண்காணிப்பாளர் பெட்டி, மருத்துவப் பெட்டி, உபகரணங்கள் பெட்டி ஆகியவை அடங்கியிருக்கும். இந்த ரயில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கியக் கூடியதாகும்.
மேலும் இந்த ரயிலில் மருத்துவர்கள் அறை, 12 படுக்கைகள், அறுவைச் சிகிச்சை அறை ஆகியவையும் இருக்கும். அதேபோல பெருநகரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவிலான டீசல் மின்சாரத் தொடர் ரயிலை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
இப்போது 1600 குதிரைத் திறன் கொண்ட மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய டீசல், மின்சார ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த ரயில் ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இயக்கப்படும்.
ஐ.சி.எஃப். பொது மேலாளர் அபய் கே.கன்னா: 2012-2013ம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 1620 ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப். தொழிற்சாலை தயாரித்து சாதனை படைத்துள்ளது. மொத்தமாக 53 வகையிலான ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப். தயாரித்து வழங்கியுள்ளது.
கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டிகள், அதிநவீன டீசல்-மின்சாரத் தொடர் ரயில் பெட்டிகள் என, மொத்தம் 491 பெட்டிகள் தாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 30 டீசல்-மின்சார ரயில் தொடர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து 260 ஏ.சி பெட்டிகளையும், 839 சாதாரண வகுப்பு பெட்டிகளையும் ஐ.சி.எஃப். தயாரித்து வழங்கியுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணயத்தின் இயக்குநர் (பொது) வி.ராமசந்திரன், ரயில்வே வாரிய உறுப்பினர் (பணியாளர்) ஏ.கே.வோரா, ஐ.சி.எஃப். தலைமை இயந்திரவியல் பொறியாளர் பங்கஜ் குமார், தலைமை மின்சாரப் பொறியாளர் ஜே.எஸ்.பி.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

