சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய

Updated On :2 ஏப்ரல் 2013, 6:59 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.

இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com  ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.எஸ்சி.- தாவரவியல், விலங்கியல், வேதியியல், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், எம்.ஏ. தமிழ், அப்ளைடு சைக்காலஜி, எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், டிஸ்ஸாஸ்டர் மேனேஜ்மெண்ட், ஹியுமன் ரைட்ஸ், அஸ்ட்ராலஜி, எம்எஸ்சி- வேதியியல், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் என்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ், மீடியா கிராபிக்ஸ் அனிமேஷன், கிராபிக்ஸ் அனிமேஷேன், எம்.எஃப்.ஏ. டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி, எம்.சி.ஏ., எம்.ஹெச்.எஸ்சி- வெல்நெஸ் பிட்னஸ் சயன்ஸ், பிசியோதெரபி, அப்ளைடு எர்கோனாமிக்ஸ்  எம்.டான்ஸ்., எம்.பி.ஏ. மற்றும் டிப்ளமோ வகுப்புகள்.