சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பை முற்றுகையிடும் போராட்டம்: எஸ்.பி.உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்துவரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில்

Updated On :2 ஏப்ரல் 2013, 7:04 am

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்துவரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பை புதன்கிழமை கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிர்வாகம் சில நாள்களாக ஏதோ விஷப் பரீட்சை நடத்தி வருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் கிளப்பும் வகையில் அணு உலையில் இருந்து கடும் சப்தம், புகை, துர்நாற்றம் வெளியேறுகின்றன. 

அடர்த்தியான கரும்புகையும், வெள்ளைப்புகையும் மாறி மாறி வருகிறது.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அணுமின் நிலையத்தைக் கட்டிவிட்டு உலையின் அருகே வாழும் மக்களுக்கு எந்தவிதமான பேரிடர் பயிற்சியும் தராமல், எந்தவிதமான  அறிவிப்பும் கொடுக்காமல் செயல்பட்டு வரும் அணுமின் நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (ஏப்ரல் 3) செட்டிகுளம் அணுமின் நகரியத்தை (ஊழியர்கள் குடியிருப்பு) கடல் வழியாகச் சென்று முற்றுகையிடுகிறோம். மீனவ மக்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றனர்.