தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்புகள்: தமிழகம் தொழிற்துறையில் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. தொழில் உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் தமிழகத்தின் பங்கு சுமார் 10 சதவீதம் ஆகும்.
தமிழகத்துக்கு மேலும் பல தொழிற்சாலைகளைக் கவரும் வகையில் சிப்காட் நிறுவனம் மூலம் 25,000 ஏக்கரில் நில வங்கியை அரசு ஏற்படுத்தும். பொதுத்துறை - தனியார் துறை பங்கேற்புடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
புதிய சலுகைத் தொகுப்பு: 2013-14-ம் ஆண்டில், மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை ஏற்படுத்திட அரசு ஆவன செய்யும். 4 உற்பத்தி மண்டலகங்கள், 1 வேளாண் வணிக மண்டலம், 2 வணிக முதலீட்டு மண்டலங்கள், ஒரு சிறப்புச் சுற்றுலா மண்டலம், ஒரு கிராமப்புற சுற்றுலா மையம் மற்றும் ஓர் அறிவுசார் மையம் ஆகியவற்றை அமைக்க இந்த திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு காலத்துக்குள் ரூ. 1,90,000 கோடி தொழில் முதலீட்டை இந்தத் திட்டம் ஈர்க்கும்.
தொழில் துறையில் பின் தங்கியுள்ள தென் மாவட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கக்கூடிய புதிய சலுகைத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். இது முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

