"ஆழ்கடல் டியூனா' மீன்பிடிப் படகுகள் வாங்க வழங்கப்படும் மானியம் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
"ஆழ்கடல் டியூனா' மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கு வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு நமது மீனவர்கள் மாறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக 23 மீன் இறங்கு தளங்கள் மற்றும் நான்கு மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.7.78 கோடியில் புதிய மீன் இறங்கு தளம்: கடலூர் மாவட்டம் முடசலோடையில் ரூ. 7.78 கோடியில் புதிய நவீன மீன் இறங்கு தளம் அமைக்கப்படும். பொதுத் துறை, தனியார் துறை மூலமாக ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நாகூர், பரங்கிப்பேட்டையில் தலா ரூ.10 கோடியில் படகுகள் பாதுகாப்பாக சென்றுவர வசதியாக முகத்துவாரங்கள் சீரமைக்கப்படும். மீன் வளத் துறைக்காக 2013-14-ம் ஆண்டில் ரூ. 467.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

