சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்

தமிழக அரசின் சார்பில் நடப்பாண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று

Updated On :22 மார்ச் 2013, 7:19 am

தமிழக அரசின் சார்பில் நடப்பாண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம் நாட்டிலேயே ஒரு முன்னோடி முயற்சியாகும்.

கடந்த இரண்டாண்டுகளில் ரூ.2,160 கோடி செலவில் 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.

இதனையடுத்து 2013-2014-ம் ஆண்டிலும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் அமைக்கப்படும். மேலும், இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2013-2014-ல்ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

தூய்மை கிராமங்கள்: கிராமங்கள் தூய்மையானதாகவும் துப்புரவுடனும் விளங்க அனைத்து கிராமங்களிலும் நீடித்து நிலைக்கத்தக்க வகையில் திடக் கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்துவது அவசியம்.

இதற்கென 2003-ம் ஆண்டிலேயே தூய்மை கிராமத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், திமுக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இத்திட்டத்தை 2011-2012 முதல் தமிழக அரசு, மீண்டும் உயிர்ப்பித்து செயல்படுத்தி வருகிறது. மறு சுழற்சி முறை, கழிவுகளை அகற்றும் வசதிகளோடு கூடிய திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து  கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்கள், அந்த நகரங்களில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களில் பங்கு கொண்டு திடக்கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்தும்.

கழிவுகளைச் சேகரித்துக் கையாளும் செலவுகள் உள்ளிட்ட, இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதிப்பகிர்வுத் தொகையிலிருந்து ரூ.150 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், 2013-2014-ல் தூய்மை பாரதம் திட்டத்தில் கிடைக்கக்கூடிய ரூ. 97.85 கோடி நிதியும், திடக்கழிவு, கழிவு நீர் மேலாண்மைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

கிராமப்புற உள்கட்டமைப்பு:  ஊரகக் குடியிருப்பை வளர்ச்சி அலகாகக் கருதி கவனம்  செலுத்தக்கூடிய மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழ்நாடு கிராமக் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் (பஏஅஐ) இந்த அணுகுமுறைக்கான முக்கிய எடுத்துக்காட்டாகும். 

கடந்த இரண்டாண்டுகளில், இத்திட்டத்தில் ரூ.1,430 கோடி செலவில் 96,508 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2013-2014-ல் 15,115 குடியிருப்புகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.