நடப்பாண்டில் 2 அரசு பொறியியல் கல்லூரிகள், 10 பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டாண்டுகளில் 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளையும், ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியையும் அரசு திறந்துள்ளது. மேலும், 10 புதிய அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும், இரண்டு புதிய அரசுப் பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2013-2014-ம் கல்வியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், திருச்சியில் உள்ள பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் தொடங்கும். மேலும் கூடுதலாக 8 கலை -அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டில் செயல்படத் தொடங்கும். 2010-2011-ல், 6,09,915 ஆக இருந்த உயர் கல்வி மாணவர்களின் சேர்க்கை, 2012-2013-ல் 6,51,807 ஆக உயர்ந்துள்ளது. 2012-2013-ல் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் ரூ.518 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2013-2014-ல் இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.673 கோடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா மடிக்கணினி: வரும் நிதியாண்டில் மாணவர்களுக்கு 5.65 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாடு: 2012-2013-ல் சென்னையில் புதிய ஓடுதளங்கள் அமைக்கவும், நேரு விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தவும் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. 2010-2011-ல் ரூ.31.26 கோடியாக இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கான மொத்த ஒதுக்கீடு 2013-2014-ல் ரூ.112.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

