சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிதிநிலை அறிக்கை: அமைச்சரவை ஒப்புதல்

நிதிநிலை அறிக்கையில் உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத்

Updated On :12 மார்ச் 2013, 7:13 am

சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை செய்யப்பட உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை கூடியது.  2013-2014-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழக சட்டப் பேரவையில் வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சட்டம்-ஒழுங்கு நிலவரம்: அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.