டெசோ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஆர். பாலசுப்பிரமணியன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 12-ம் தேதி தமிழகத்தில் மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் விளம்பரத்துக்காகவும், வரவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டும் அவர் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தப் போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, டெசோ அமைப்பின் இந்தப் போராட்டத்தை தடை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்.
எனது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பாலசுப்பிரமணியன் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெசோ அமைப்பின் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் ஒரு எதிர்மனுதாரராகச் சேர்த்து மனு தாக்கல் செய்ய அவகாசம் தருமாறு மனுதாரர் பாலசுப்பிரமணியன் கோரினார். இதனை ஏற்றுக் கொண்டு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
பிற்பகல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரரான தி.மு.க. தலைவர் கருணாநிதி தரப்பிலும் இந்த வழக்கின் விசாரணையில் பங்கேற்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் மாலை 4.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.
நீதிபதிகள் உத்தரவு: இந்த வழக்கு மாலை 4.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர் மனுதாரரான கருணாநிதிக்கு மாலை 4.20 மணிக்கு தந்தி மூலம் தான் நோட்டீஸ் அனுப்பியதாக மனுதாரர் கூறியுள்ளார். அதாவது நீதிமன்றம் கூடுவதற்கு வெறும் 10 நிமிஷங்களுக்கு முன்புதான் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மனுதாரரின் இந்த அணுகுமுறையானது இந்தப் பிரச்னையில் அவர் தீவிரம் காட்டவில்லை என்பதையும், விளம்பரம் தேடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார் என்பதையும் காட்டுகிறது.
ஆகவே, எதிர் மனுதாரரான கருணாநிதிக்கு நோட்டீஸ் வழங்காததாலும், போராட்டம் 12-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாலும், தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடுமையான எந்த உத்தரவையும் (உச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ர்ழ்க்ங்ழ்) இந்த வழக்கில் எங்களால் பிறப்பிக்க இயலாது.
எனினும் பொது வேலைநிறுத்தம் என்ற பெயரில் பொதுமக்களின் உயிருக்கோ, உடைமைகளுக்கோ, உரிமைகளுக்கோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்றும், இத்தகைய போராட்டங்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுத்திட அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பரிசீலித்து, உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

