சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி "எர்த் ஹவர்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"டபிள்யூ.டபிள்யூ.எஃப். ("வேர்ல்ட் வைல்ட் லைஃப்') இந்தியா' என்ற சமூக நல அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் ஜீவா சென்னையில் செய்தியாளர்களிடம திங்கள்கிழமை கூறியது:
சுற்றுச் சூழல் மாற்றத்தினால் உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
எனவே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த "எர்த் ஹவர்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 23-ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மின் விளக்குகள், மின் சாதனங்களைப் பயன்படுத்தாமல் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான இந்த முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஜீவா கேட்டுக் கொண்டார்.
டபிள்யூ.டபிள்யூ.எஃப் இந்தியா அமைப்பின் இந்திய பிரசாரப் பிரிவுத் தலைவர் ஆர்த்தி கோஸ்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

