சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு படிப்புக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
முதலாமாண்டு மாணவர்கள் சில மாதங்களில் இரண்டாமாண்டு படிப்புக்குச் செல்ல உள்ளனர். இந்த நிலையில், இக்கல்லூரியில் இரண்டாமாண்டு படிப்புக்கான தகுதி, மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவதற்காக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த வீரண்ண கௌடா தலைமையிலான ஆய்வுக் குழு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தது.
இக் குழுவினர் மருத்துவமனையில் ஆய்வுக்கூடம், வகுப்பறை, அறுவை சிகிச்சைக் கூடம், உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடம் உள்பட பல பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

