வால்மார்ட் நிறுவனம் ரூ.595 கோடி முதலீடு: அமலாக்கப் பிரிவு விசாரணை:நீதிமன்றத்தில் தகவல்
சென்னை, மார்ச் 1: சில்லறை வர்த்தக நிறுவனங்களான செடார் சப்போர்ட் சர்வீசஸ், பாரதி வால்மார்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்குப் பெறப்பட்ட ரூ.595 கோடி வெளிநாட்டு முதலீடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள பாரதி வால்மார்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமலாக்கப்பிரிவின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் தாக்கல் செய்த மனு விவரம்:- செடார் சப்போர்ட் சர்வீசஸ் லிமிடெட், பாரதி வால்மார்ட் பிரைவேட் லிமிடெட், பாரதி ரீடெயில் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட முதலீடு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

