சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை சீலா மீன்

பாம்பன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அரிய வகை சீலா

Updated On :2 மார்ச் 2013, 10:32 am

பாம்பன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அரிய வகை சீலா மீன் சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் போரிஸ்டன் என்ற மீனவர், தனது குழுவினருடன் கச்சத்தீவு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அவர்களது வலையில் அரியவகை சீலா மீன் ஒன்று சிக்கியது. 5 அடி நீளமும்,15 கிலோ எடையும் கொண்ட அந்த மீனின் முன்புறமும், பின்புற வால் பகுதியும் தங்க நிறத்தினால் ஆனதாக இருந்துள்ளது. புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்கள், அதை அனைவரிடமும் காட்டினர். பொதுமக்கள் அந்த மீனை ஆர்வமுடன் வந்து பார்த்தனர். அந்த மீனை விலைக்கு வாங்க பலத்த போட்டியும் நிலவியது.