தேர்தலை மனதில் வைத்து அனைத்து சமுதாயப் பேரியக்கம் செயலாற்றவில்லை என்றார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து சமுதாயப் பேரியக்க கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல எங்கள் இயக்கம். பட்டியல் இனத்தில் 76 ஜாதிகள் உள்ளன. அதில், சில பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று ஜாதி மோதல்களை உருவாக்கப் பார்க்கின்றனர்.
சுயநலம்மிக்க தலைவர்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். சிலரின் தவறான வழி நடத்தல் காரணமாக தற்போது நிலவி வரும் சமூக நல்லிணக்கம் கெடும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து சமுதாய பேரியக்கம் செயலாற்றவில்லை.
அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த இயக்கத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் இயக்கங்கள் எவை என்பதை விரைவில் அறிவிப்பேன். அது போல வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டியவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவில்லையெனில் தில்லி வரை சென்று போராடுவோம் என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

