சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம்

Updated On :2 மார்ச் 2013, 7:45 am

தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையின் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறையின் பணியை செம்மைப்படுத்தவும் அவ்வப்போது அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.  தமிழக காவல்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.க்கள் மொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் மொத்தமாக டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். 

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 50 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் சனிக்கிழமை உத்தரவிட்டார். சென்னை தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இந்த டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த டி.எஸ்.பி.க்கள் ஒரே பதவியில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர்களாக இருப்பதாலும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகார் அடிப்படையிலும் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.