அமெரிக்காவில் ஒரு பெண் கால்கள் நீளமாக இருப்பதனால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஸ்வெட்லானா பனரடோவா என்ற அந்த 42 வயது பெண்மணியின் கால்கள் மட்டும் 4 அடி 4 அங்குலம். மிக நீண்ட கால்களுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளபோதிலும், உலகில் உயரமான பெண்மணி அவர் இல்லை.
கால்கள் மட்டுமே அவருக்கு நீளம். அவரது மொத்த உயரம் 6 அடி 5 அங்குலம். அமெரிக்காவில் வசித்து வந்தாலும் அவர் ரஷியப் பெண். மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்த அவர், அங்கேயே திருமணம் செய்துகொண்டு "செட்டில்' ஆகிவிட்டார்.
கல்லூரியில் படித்தபோது சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாகத் திகழ்ந்தார். பள்ளியிலும்,வெர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்திலும் கூடைப்பந்து விளையாட்டில் அவர் எட்டிய சாதனைகள் இப்போது வரை முறியடிக்கப்படவில்லை. இப்போது அங்குள்ள பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறார்.
தனது நீண்ட கால்களை மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்த்துச் செல்வது சிறிது அசெüகர்யமாக இருக்கிறது என்றாலும், கடவுள் கொடுத்த வரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஸ்வெட்லானா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

