மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மகாராஷ்டிராவின் பண்டாராவில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு வேதனையாக உள்ளது. நாங்கள் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம்" என்று மோடி கூறியுள்ளார்.
தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன், குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது இதயத்தை நொறுக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


