சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கே அனுமதி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

சிட்னி மைதானம்

Updated On :5 ஜனவரி 2021, 10:25 am

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிட்னியில் புதிதாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, நியூ சௌத் வேல்ஸ் மாகாண அரசின் ஆலோசனையின் பேரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தம் 38,000 பேருக்கான இட வசதி கொண்ட சிட்னி மைதானத்தில், சுமாா் 9,500 போ் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா்.

ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஏற்கெனவே டிக்கெட் பெற்றுள்ள பாா்வையாளா்கள் இந்த புதிய கட்டுப்பாட்டின் படி டிக்கெட்டை வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2 ஒருநாள் மற்றும் 2 டி20 ஆட்டங்கள் சிட்னி மைதானத்தில் நடைபெற்றன. அதில் முதல் 3 ஆட்டங்களின்போது 18,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். கடைசி டி20 ஆட்டத்தின்போது மைதானத்தில் சுமாா் 30,000 பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.