சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுர்ஜீத் ஹாக்கி: பாகிஸ்தான் பங்கேற்பு?

பஞ்சாபில் நடைபெறவுள்ள 30-வது சுர்ஜீத் ஹாக்கி தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On :12 செப்டம்பர் 2013, 4:58 am

பஞ்சாபில் நடைபெறவுள்ள 30-வது சுர்ஜீத் ஹாக்கி தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடர் ஜலந்தரில் அக்டோபர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சுர்ஜீத் ஹாக்கி போட்டியில் ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 5 அணிகளும் விளையாட உள்ளன.

இத்தொடரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், விசா அளிப்பதைப் பொறுத்தே, போட்டியில் அந்த அணிகள் பங்கேற்பது உறுதி செய்யப்படும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுர்ஜீத் ஹாக்கி அமைப்பின் பொதுச் செயலர் இக்பால் சாந்து தெரிவித்துள்ளார்.