துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் மிகுந்த ஏமாற்றம் அளித்தார்.
அமெரிக்க ஓபனில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் 2இல் வெற்றி பெற்று 2-வது சுற்று வரை முன்னேறிய சோம்தேவ், இந்த ஆட்டத்தில் முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள சோம்தேவ், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் கான்ஸ்டான்டினிடம் தோல்வியைத் தழுவினார். கான்ஸ்டான்டினுக்கு எதிராக சோம்தேவ் தற்போதுதான் முதன் முதலாக விளையாடியுள்ளார்.
திவிஜ்-ராஜா ஜோடி தோல்வி: லக்சம்பர்கில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் மேக்ஸிமிலன்-எஸ்டோனியாவின் ஜர்ஜென் úஸாப் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
திவிஜ் சரணும், அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


