உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னீ ரீஸ் தங்கம் வென்றார்.
இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று "ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார். முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியிலும் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள லுஷினிகி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
போட்டியின் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்னீ, 7.01 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். நைஜீரியாவின் பிளெஸ்ஸிங் ஓகாக்பரே 6.99 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், செர்பியாவின் இவானா ஸ்பேனாவிக் 6.82 மீ. தூரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.
ரஷியாவுக்கு 3-வது தங்கம்: ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்டர் இவானோவ், 1 மணி நேரம், 20 நிமிடங்கள், 58 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 20 கி.மீ. நடைப் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக தங்கத்தைத் தட்டிச் சென்றது ரஷியா.
லண்டன் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் செங் டிங் (1:21.09) வெள்ளிப் பதக்கத்தையும், ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்தவரான ஸ்பெயினின் மிகைல் லோபஸ் (1:21.21) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரான குவாதிமாலாவின் எரிக் பரான்டோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய வீரர்கள் ஏமாற்றம்: ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான இர்ஃபான், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேநேரத்தில் மற்ற இரு இந்தியர்களான குருமீத் சிங், சந்தன் சிங் ஆகியோர் முறையே 33 மற்றும் 34-வது இடங்களைப் பிடித்தனர்.
இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இர்ஃபான் விரைவாக முன்னேறினார்.
இதனால் இவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 15-வது கி.மீ. தூரத்தை நிறைவு செய்வதற்கு முன்பு வரை அவர் 6-வது இடத்தில் இருந்தார். 15 கி.மீ. தூரத்திற்குப் பிறகு விதிகளை மீறியதாகக் கூறி இர்ஃபானை நிறுத்திய போட்டி நடுவர்கள், அவரை தகுதி நீக்கம் செய்தனர்.
தேசிய சாதனையை தன்வசம் வைத்திருக்கும் இர்ஃபான், லண்டன் ஒலிம்பிக்கில் 10-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பதக்கப் போட்டிகள்
போட்டிகள் நேரம்
ஆடவர் கம்பு ஊன்றித் தாண்டுதல் - இரவு 8.30
மகளிர் குண்டு எறிதல் - இரவு 9.55
ஆடவர் சங்கிலிக் குண்டு எறிதல் - இரவு 10
மகளிர் 400 மீ. ஓட்டம் - இரவு 10.45
ஆடவர் 110 மீ. தடை தாண்டும் ஓட்டம் - இரவு 11
மகளிர் 100 மீ. தடை தாண்டும் ஓட்டம்- இரவு 11.20
நேரடி ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

